2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தாக்குதலில் 128 பேர் கொல்லப்பட்டனர்; அதிர்ச்சியில் பாகிஸ்தான்

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 128 பேர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அதிர்ச்சியான ஒரு சூழல் நிலவுகிறது. அதுவும், 25ஆம் திகதி நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான கேள்விகளை இது எழுப்பியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபும், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரின் மகள் மரியம் ஷெரீபும், வெள்ளிக்கிழமையன்று நாட்டுக்குத் திரும்ப வந்தபோது, விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.

அதன் பின்னர் ஒன்றுகூடியிருந்த ஷெரீபின் ஆதரவாளர்களுக்கு மத்தியிலேயே, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் குறிப்பாக, ஆதரவாளர்கள் ஒன்றுகூடியபோது, அவர்களது தொலைபேசிகள் செயலிழக்கச் செய்யப்பட்டன எனக் கூறப்படுகிறது. அத்தோடு, பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட 128 பேருக்கு மேலதிகமாக சுமார் 150 பேர் காயமடைந்திருந்த நிலையில், அவர்களில் பலரின் நிலை, கவலைக்கிடமாகக் காணப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

இவையனைத்தும், பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .