2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தாக்குதல் சந்தேகநபர்: ‘நாஸிகள் மீது விருப்பத்தை வெளிப்படுத்தினார்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேர்ஜினியாவில், காரால் மோதி, ஒருவரைக் கொன்றதோடு, 19 பேரைக் காயப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர், பாடசாலைக் காலத்தில், நாஸிகள் மீது ஆர்வத்தைக் கொண்டிருந்தார் என, அவரது முன்னாள் ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 வயதான ஜேம்ஸ் அலெக்ஸ் ஃபீல்ட்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள இச்சந்தேகநபர், காரால் மோதித் தள்ளுவதற்கு முன்னர், வெள்ளையின ஆதிக்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திலும் காணப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கும் போது, இவரை, “மிகவும் திறமையான ஆனால் தவறாக வழிநடத்தப்பட்ட, தவறான எண்ணங்களைக் கொண்ட ஒருவர்” என வர்ணித்தார்.

நவ நாஸிஸ இயக்கம் தொடர்பாக அதிக ஆர்வத்தைக் கொண்டிருந்த இவர், அது தொட்பான விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பித்ததாகவும், அதில் அவர், மிகச்சிறப்பாக ஆராய்ந்து எழுதியிருந்த போதிலும், ஹிட்லரையும் நாஸிகளையும் பாராட்டி அல்லது உயர்வாக எண்ணி எழுதியிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஃபீல்ட்ஸின் எண்ணத்திலிருந்து மாற்றுவதற்கு தான் முயன்றபோதிலும், அது வெற்றியளித்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த ஃபீல்ட்ஸ், தாயாருடனேயே வாழ்ந்து வந்துள்ளார். ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தனது மகன் செல்கிறார் என்பதை அறிந்திருந்த போதிலும், என்ன வகையான ஆர்ப்பாட்டமென்பதை அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமென்றே நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .