2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்கொரியாவுடனான சந்திப்பைப் பிற்போட்டது வடகொரியா

Editorial   / 2018 மே 17 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில், நேற்று (16) நடைபெறவிருந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையை, வடகொரியா நேற்று (16) தவிர்த்தது. தென்கொரியாவும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து நடத்தும், பாதுகாப்புப் பயிற்சிகளைக் காரணங்காட்டியே, இச்சந்திப்பில் கலந்துகொள்ள, வடகொரியா மறுத்திருந்தது.

ஐ.அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, “மக்ஸ் தண்டர்” என்ற விமானப் பயிற்சி நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. எனினும், இப்பயிற்சியை, “ஆத்திரமூட்டல்” என அழைத்த வடகொரியா, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில், அண்மைக்காலத்தில் முன்னேற்றமடைந்து வந்த போக்குக்கு மாறானதாக, இப்பயிற்சிகள் அமைந்துள்ளன எனக் குற்றஞ்சாட்டியது.

நேற்று நடைபெறவிருந்த கூட்டத்தின்போது, வடகொரிய - தென்கொரியத் தலைவர்களுக்கிடையில், ஏப்ரல் 27ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்படவிருந்தது. கொரியப் போரை உத்தியோகபூர்வமாக நிறுத்துவது, முழுமையான அணுவாயுதமழிப்பை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்படவிருந்தன.

ஐ.அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சிகளை, வடகொரியா தொடர்ந்தும் எதிர்த்து வந்திருந்தாலும், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உறவில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு மத்தியில், பேச்சுவார்த்தையைப் பிற்போடுவதற்கு எடுத்துள்ள முடிவு, முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .