2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நைஜீரியாவில் 1,800 சிறைக்கைதிகள் வெளியேறினர்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றை துப்பாக்கிதாரிகள் தாக்கியதை அடுத்து 1,800க்கும் அதிகமான சிறைக் கைதிகள் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்வாகக் கட்டத்தை வெடிபொருள்களை வைத்து தகர்த்ததன் மூலமே தென்கிழக்கு நகரமான ஒவெரியுள்ள சிறைச்சாலைக்குள் தாக்குதலாளிகள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், ஆறு சிறைக்கைதிகள் திரும்பியுள்ளதாகக் கூறப்படுவதுடன், 35 பேர் தப்ப மறுத்துள்ளனர்.

பியாஃப்ராவின் பழங்குடியின மக்கள் எனும் தடை செய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவை பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதை குறித்த குழு மறுத்துள்ளது.

இமோ மாநிலத்திலுள்ள குறித்த சிறைச்சாலையிலிருந்து 1,844 சிறைக்கைதிகள் தப்பியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

றொக்கெட்டால் ஏவப்படும் கிரனேட்கள், இயந்திரத் துப்பாக்கிகள், வெடிபொருள்கள், றைபிள்களை தாக்குதலாளிகள் கொண்டிருந்ததாக, பொலிஸ் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .