2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பாகிஸ்தானில் மோதல்கள்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாகிஸ்தானின் லாகூரிலுள்ள தமது தலைமையத்தில், ஆறு பாதுகாப்புப் படையினரை, வலதுசாரிக் குழு ஒன்றான தெஹ்ரீக்-ஈ-லப்பைக் (டி.எல்.பி) நேற்று பிடித்துச் சென்றுள்ளதாக, பாகிஸ்தானிலுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டி.எல்.பியின் தலைவரான மெளலவி சாட் றிஸ்வி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரமாக இடம்ப்பெற்ற வன்முறை மோதல்களையடுத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றிஸ்வியின் கைதுக்கெதிராக அவரின் ஆதரவாளர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, கடந்த வார ஆரம்பத்தில் டி.எல்.பியை பாகிஸ்தான் தடை செய்திருந்தது.

துணை இராணுவத்தினரும், பொலிஸ் அதிகாரிகளும் சிக்கியிருந்த நவன்கொட் பொலிஸ் நிலையத்தை கலக்காரர்கள் தாக்கியதாகவும், உதவி ஆய்வாளர் கடத்தப்பட்டதாக, லாகூரைத் தலைநகராகக் கொண்ட பஞ்சாப் மாகாண பொலிஸார் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் பெற்றோல் குண்டுகளைக் கொண்டிருந்ததாகவும், 50,000 லீற்றர்கள் பெற்றோலைக் கொண்டிருந்த தாங்கித் ட்ரக்கொன்றை திருடியதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .