2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதிய தடைகளை ஐ.அமெரிக்கா அறிவிப்பு; சீனா கோபமடைவு

Editorial   / 2018 பெப்ரவரி 26 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வைப்பதற்காக, புதிய தொகுதித் தடைகளை, ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பான தனது அதிருப்தியை, சீனா வெளிப்படுத்தியுள்ளது.

வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தடைகளுக்கு மேலதிகமாக, ஐக்கிய அமெரிக்காவாலும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாகவே, புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 27 நிறுவனங்களுக்கும் 28 கப்பல்களுக்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என, ஐக்கிய அமெரிக்க திறைசேரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஐ.நா தடைகளின்படி, நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு, வடகொரியாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடைகளை மீறி, அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வடகொரியா முயல்கிறது என்ற குற்றச்சாட்டுக் காணப்பட்டது. இதன் பின்னணியிலேயே, புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

புதிய தடைகளை, தென்கொரியாவும் ஜப்பானும் வரவேற்றுள்ளன.

ஆனால், இவ்வாறு தடை விதமிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ள நாடுகளுள் சீனா, சிங்கப்பூர், தாய்வான், ஹொங் கொங், மார்ஷல் தீவுகள், தன்ஸானியா, பனாமா, கொமொரொஸ் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், தமது நாட்டு நிறுவனங்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என, அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்தது. அத்தோடு, இது தொடர்பான தமது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .