2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மடகாஸ்கரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வடைவு

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபிரிக்காவுக்குத் தென்கிழக்காக உள்ள நாடான மடகாஸ்கரில், 10 நாட்களுக்கு முன்னர் தாக்கிய சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 51ஆக உயர்வடைந்துள்ளது. அத்தோடு, இன்னும் 22 பேரைக் காணவில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆவா எனப்படும் சூறாவளி, கடந்த 5, 6ஆம் திகதிகளில், மடகாஸ்கரின் கிழக்குக் கரையோரத்தைத் தாக்கியிருந்தது.  இதன்போது காற்று, மணிக்கு 140 தொடக்கம் 190 கிலோமீற்றர் வரையிலான வேகத்தில் வீசியிருந்தது.

கடந்த வாரம் வெளியாகியிருந்த தரவுகளின் அடிப்படையில், 29 பேர் பலியாகியிருந்தனர் எனக் கூறப்பட்டது. இந்நிலையிலேயே, 51 பேர் பலியாகியுள்ளனர் என, தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஆபத்து மற்றும் அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய அலுவலகம், சூறாவளி காரணமமாக, 54,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு மார்ச்சில், எனவோ எனப்படும் சூறாவளி, மடகாஸ்கரின் வடகிழக்குக் கரையோரத்தைத் தாக்கியிருந்தது. அதன்போது, 78 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .