2024 மே 08, புதன்கிழமை

மண்சரிவில் 26 பேர் பலி

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதித் தீவான பிலிரானில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக, குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர் என, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நேற்று (17) தெரிவித்தனர்.

காய்-டக் என்ற பருவகாலச் சூறாவளி, பிலிப்பைன்ஸின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய மறுநாள், இந்த மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, பிலிரானின் மாகாண அனர்த்த ஆபத்துக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ அதிகாரியான சொப்ரோனியோ டசில்லோ, “பிலிரானின் நான்கு நகரங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளால், 26 பேர் மொத்தமாக இறந்துள்ளனர். சடலங்களை நாங்கள் மீட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் தாக்கிய இந்தச் சூறாவளி, நாட்டின் மேற்குப் பகுதி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நிலையில், ஏனைய பகுதிகளிலும் கடும் மழை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பிலிப்பைன்ஸின் கரையோரக் காவல் படையின் தரவின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 11,000 பேர், இதுவரை சூறாவளியால் சிக்கியுள்ளனர். தவிர, 10,000க்கும் மேற்பட்டோர், மீட்பு நிலையங்களிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

காய்-டக் என்ற இச்சூறாவளி காரணமாக, அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீற்றர்கள் வேகத்தில் காற்று வீசியது என, வானிலை ஆராய்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X