2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மத்தியதரைக் கடலில் 41 அகதிகள் மூழ்கினர்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மத்திய மத்தியதரைக்கடலில் கடந்த சனிக்கிழமை படகு கவிழ்ந்த நிலையில் குறைந்தது 41 பேர் மூழ்கியுள்ளனர்.

லிபியாவிலிருந்து இம்மாதம் 18ஆம் திகதி டிங்கியொன்றில் புறப்பட்ட குறைந்தது 120 அகதிகளுக்குள்ளேயே மூழ்கியோர் உள்ளடங்குவதாக புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனமும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் (யு.என்.எச்.சி.ஆர்) இன்று வெளியிட்ட கூட்டறிக்கையொன்றில் தெரிவித்துள்ளன.

யு.என்.எச்.சி.ஆர்-ஆல் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில், கடலில் 15 மணித்தியாலங்கள் இருந்த பின்னர் டிங்கியானது நீரை உள்ளெடுக்க ஆரம்பித்ததுடன், உதவிக்கு வர்த்தகக் கப்பலொன்று வர முன்னர் எட்டுப் பேர் இறந்துள்ளனர்.

குறித்த சம்பவத்திலிருந்து தப்பியவர்களை இத்தாலியிலுள்ள  போர்டோ எம்பெடோக்லேக்கு கப்பல் கொண்டு சென்றுள்ளது.

காணாமல் போனவர்களுள்ள் மூன்று சிறுவர்களும், நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .