2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முன்னாள் ஜனாதிபதிக்கு $100 மில்லியன் கையூட்டு வழங்கினார் “எல் சப்போ”’

Editorial   / 2019 ஜனவரி 17 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் முன்னாள் ஜனாதிபதி என்றிக்கே பெனா நியட்டோவுக்கு கையூட்டாக 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஒரு முறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மெக்ஸிக்கோவின் போதைமருந்து கடத்தல்காரரான ஜோக்கின் “எல் சப்போ” குஸ்மன் வழங்கியதாக அவரின் உதவியாளர் அலெக்ஸ் சியுபென்டஸ் விசாரணையின்போது நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் குஸ்மனின் வலதுகரமாக இருந்ததாகத் தன்னை வர்ணிக்கும் அலெக்ஸ் சியுபென்டஸ், ஐக்கிய அமெரிக்காவின் புரூக்லின் மத்திய நீதிமன்றத்தில் குஸ்மனின் வழக்கறிஞரொருவரான ஜெவ்ரி லிச்மன்னால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டபோதே மேற்குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கையூட்டை குஸ்மன் ஒழுங்குபடுத்தியதாக அதிகாரிகளிடம் 2016ஆம் ஆண்டு வினவியபோது அலெக்ஸ் சியுபென்டஸ் ஆம் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், என்றிக்கே பெனா நியட்டோவையோ அல்லது அவரது பேச்சாளரையோ உடனடியாக கருத்துத் தெரிவிக்க அணுகமுடியவில்லையென்ற நிலையில், முன்னர் கையூட்டுகளை பெற்றதை என்றிக்கே பெனா நியட்டோ மறுத்திருந்தார். எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டை என்றிக்கே பெனா நியட்டோவின் முன்னாள் பணியாட்தொகுதியின் தலைவர் டுவிட்டரில் நிராகரித்துள்ளார்.

இதேவேளை, என்றிக்கே பெனா நியட்டோ ஆரம்பத்தில் 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வினவியதாகவும் கையூட்டடு, 2012ஆம் ஆண்டு ஒக்டோபரில் வழங்கப்பட்டதாக அலெக்ஸ் சியுபென்டஸ் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .