2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஷ்யாவில் பேச்சுவார்த்தை இல்லை

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதன் ஏவுகணை ஏவுதல் தொடர்பாகவும் வடகொரிய அரசியல்வாதிகளும் தென்கொரிய அரசியல்வாதிகளும், ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள் என, ரஷ்ய ஊடங்கள் நேற்று (15) தெரிவித்தன. இரண்டு நாடுகளுமே, ரஷ்யாவில் நடைபெறும் ஒரே நிகழ்வில் பங்குபற்றும் நிலையிலேயே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாடொன்று, ரஷ்யாவில் இன்று இடம்பெறவுள்ள நிலையில், இதன்போது, இரு நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெறுமென, ஊகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், தென்கொரியாவும் ஐக்கிய அமெரிக்காவும் தமது இராணுவப் பயிற்சிகளை நிறுத்த வேண்டுமென்ற வடகொரியாவின் நிபந்தனை பூர்த்திசெய்யப்படாத நிலையில், பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என, வடகொரிய அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி, ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் ஏவுகணை ஏவுதல், அணுகுண்டுப் பரிசோதனை ஆகியன காரணமாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் தடைகளை எதிர்கொண்டுள்ளதுடன், சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்படும் ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .