2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

லொம்பொக்கில் நிலநடுக்கம்: 91 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் சுற்றுலாத் தீவானா லொம்பொக்கை 6.9 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றுத் தாக்கியதில் குறைந்தது 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தகர்ந்த அல்லது மோசமாக பாதிக்கப்பட்ட, குறிப்பாக குறித்த நிலநடுக்கத்தின் மத்தியான லொம்பொக்கின் வடக்கிலிருந்து தகவல்கள் வருகையில் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தேசிய இடர் தணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் வெளிநாட்டவர்கள் இல்லை என்பதுடன் 209 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய இடர் தணிப்பு முகவரகத்தின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தாக்கிய குறித்த நிலநடுக்கத்தின் பின்னர் 120க்கும் மேற்பட்ட அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டதாக வானிலை, காலநிலை, புவியமைப்புக்கான இந்தோனேஷிய முகவரகம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு பலமாக இருந்ததாகவும் அயல் தீவானா பாலியில் இது உணரப்பட்டதாகவும் அங்கு இரண்டு பேர் இறந்ததாகவும் தேசிய இடர் தணிப்பு முகவரகம் கூறியுள்ளது.

லொம்பொக்கில் சில இடங்களில் மின்சாரம், தொடர்பாடல்கள் தடைப்பட்டுள்ள நிலையில், மருத்துவ உதவி, விநியோகங்கள் உள்ளடங்கியவற்றைக் கொண்ட கப்பலொன்றை தாம் அனுப்புவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தின் பின்னர் பெண்ணொருவர் குழந்தையைப் பெறுவதற்கு, வடக்கு லொம்பொக்கிலுள்ள சுகாதார நிலையமொன்றில் உதவியதாக டுவீட்டொன்றில் இந்தோனேஷிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்த நிலையில், குறித்த ஆண் குழந்தைக்கு நிலநடுக்கமென அர்த்தப்படும் ஜெம்பா என்ற பெயரையும் குறித்த பெண் சூட்டியுள்ளார்.

ஒரு வாரத்துக்கு முன்பதாக கடந்த மாதம் 29ஆம் திகதியும் லொம்பொக்கை 6.4 றிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்திருந்ததுடன் எரிமலையொன்றின் சரிவில் சில நூற்றுக்கணக்கான மலையேறுபவர்கள் சிக்கியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .