2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெனிசுவேலாவில் ஜனாதிபதித் தேர்தல்

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவின், இவ்வாண்டு ஏப்ரல் மாத முடிவுக்குள், ஜனாதிபதித் தேர்தல் நடப்படும் என, அந்நாட்டு அரசமைப்புச் சபை அறிவித்துள்ளது. இத்தேர்தலில், ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் அவரது ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஹியூகோ சாவேஸின் மரணத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதியாகப் பதவி வகித்துவரும் மதுரோ, அண்மைக்காலத்தில் ஆதரவை இழந்து வருகிறார்.

எனினும், எதிர்க்கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவும், அந்நாட்டுச் சட்ட அமுலாக்கப் பகுதிகளில் ஜனாதிபதி மதுரோவுக்குக் காணப்படும் ஆதரவு காரணமாகவும், அவர் இலகுவாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் தான் போட்டியிடப் போகிறார் என, ஜனாதிபதி மதுரோ இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதிலும், தனது கட்சி தன்னைத் தெரிந்தால், கட்சிக்காகச் சேவையாற்றத் தயாராக இருப்பதாக, தற்போது அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .