2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வைத்தியசாலை மீதான தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 22 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மேற்கு சிரியாவில், எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள சத்திர சிகிச்சை வைத்தியசாலை ஒன்றை ஆட்லறித் தாக்குதலானது தாக்கியபோது, குழந்தை ஒன்று உட்பட ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக, அறிக்கையொன்றில், சர்வதேச மீட்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

அடரெப் நகரத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதலில், ஐந்து சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 16 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக, குறித்த செயற்குழு மேலும் கூறியுள்ளது.

தற்போது குறித்த வைத்தியசாலையானது இயங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த நால்வர் ஆபத்தான நிலையிலிருப்பதாகத் தெரிவித்த குறித்த செயற்குழு, தமது பங்களார் நிறுவனமான சிரிய அமெரிக்க மருத்துவ சமூகத்தாலேயே குறித்த வைத்தியசாலை நடாத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குகையொன்றுக்குள் உள்ள வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலை, சிரிய அரசாங்க ஆட்லறித் தாக்குதல் தாக்கியதாக, துருக்கி பாதுகாப்பமைச்சும், போர்க் கண்காணிப்பகமொன்றும் தெரிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .