2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெற்றிக் கிண்ணம் ஹாட்லியற்ஸ் வசமானது

குணசேகரன் சுரேன்   / 2018 மார்ச் 15 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலங்களின் சமர் அல்லது இரட்டைச் சத வெற்றிக் கிண்ணம் என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் சென்றல் விளையாட்டுக்கழகத்துக்கும் பருத்தித்துறை ஹாட்லியற்ஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான மூன்றி போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஹாட்லியற்ஸ் அணி, 2-1 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.

மேற்படி மூன்று போட்டிகளும் ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

மூன்று போட்டிகளின் முடிவுகளும் பின்வருமாறு

முதலாவது போட்டி - 1 விக்கெட்டால் ஹாட்லியற்ஸ் அணி வெற்றி 

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் விளையாட்டுக் கழகம் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மில்லர் 49, பாலேந்திரா 37, கவி 39, லதுசன் 23 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சாகித்தியன் 4, பிரதீஸ், இயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 237 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹாட்லியற்ஸ் அணி, 47.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், மணிமாறன் 50, சாகித்தியன் 47, நிதர்சன் ஆட்டமிழக்காமல் 43, கீர்த்திகன் 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிரிசன், தீபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரண்டாவது போட்டி - 3 விக்கெட்டுகளால் ஹாட்லியற்ஸ் அணி வெற்றி

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றஜீவ்குமார் 78, பாலேந்திரா 28, மதுசன் 28, கிரிசாந் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஹாட்லியற்ஸ் அணி சார்பாக, பிரதீபன் 3, சாகித்தியன் 2, விக்கெட்டுகளையக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 238 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹாட்லியற்ஸ் அணி, சாகித்தியனின் சிறப்பானதும் அதிரடியுமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 32.1 ஓவர்களில் 7 விககெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், சாகித்தியன் ஆட்டமிழக்காமல் 165, சதீஸ் 17, சயன் 17 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சலிஸ்ரன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மூன்றாவது போட்டி - 3 ஓட்டங்களால் சென்றல் அணி வெற்றி

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்றல் அணி, 27.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சலிஸ்ரன் 24, கவி 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பிரதீபன், கீர்த்திகன் ஆகியோ தலா 3, நிசானன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 140 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹாட்லியற்ஸ் அணி, 22 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 136 ஓட்டங்களையே பெற்று தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மணிமாறன் 65, சதீஸ் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சலிஸ்ரன் 6, லதுசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இத்தொடரின் நாயகனாகக ஹாட்லியற்ஸ் அணியின் சாகித்தியன் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .