2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கைதான இளைஞரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மே 31 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

கைதுசெய்யப்பட்ட ஒருவரை கடித்து கடுங்காயங்குள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைதான 3 பொலிஸ்  உத்தியோகத்தர்களை எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எல்.எம். அஸ்கர் நேற்று புதன்கிழமை  உத்தரவிட்டார்.

கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் கடந்த 22ஆம் திகதி இரவு 11 மணியளவில்  தனது உறவினர் வீட்டில் கிரிக்கெட் போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கிண்ணியா கட்டையாறு வீதியில் இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். பின்னர் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான நிலையில் 23ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட அநீதி மற்றொருவருக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணி  சட்டத்தரணி எம்.எச்.எம்.ராபியின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  எதிர்வரும் 11ஆம் திகதி அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .