2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

72 அடி நீளமான மோட்டார் சைக்கிள்

Kogilavani   / 2011 ஜூலை 28 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பிரிட்டனைச் சேர்ந்த தண்ணீர் குழாய் பொருத்துனர் ஒருவர் உலகிலேயே மிக நீளமான மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

22 மீற்றர் (72 அடி) நீளமான இம் மோட்டார் சைக்கிளில் 25 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

கொலின் பூர்ஸ் எனும் 31 வயதான நபருக்கு இம் மோட்டார் சைக்கிளை உருவாக்குவதற்கு ஒரு மாதமே தேவைப்பட்டுள்ளது. அவர் ஒன்றரை, 125 சீசீ மொபெட்ஸ்களை இதற்குப் பயன்படுத்தியுள்ளார். அலுமினிய சட்டத்தை பயன்படுத்தி மோட்டார்சைக்களின் நீளத்தை அவர் அதிகரித்துள்ளார்.

அண்மையில் அவர் கிரந்தாம் பிராந்தியத்திலுள்ள விமான ஓடுபாதையொன்றில்  ஒரு மைல் தூரம் இந்த மோட்டார் சைக்கிளில் சவாரி செய்தார்.
இந்த மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் 3,000 ஸரேலிங் பவுன்களாகும். மணித்தியாலத்திற்கு 35 மைல்கள் வேகத்தில் இது பயணம் செய்யக்கூடியது.

'முதலில்; இந்த வாகனம் முறையாக இயங்காது எனவும், மிகவும் மெதுவாகவே பயணிக்கும் என்றே நினைத்தேன். ஆனால் ஒரு தடைவ இதில் பயணம் செய்தால் மிகவும் அது இலகுவாகிவிடும். ஆனால் அதிக பாரமான ஸ்ரீயரிங் காரணமாக கைகளுக்குத்தான் அதிக பளு ஏற்படும்' என கொலின்  பூர்ஸ் தெரிவித்தார்.

அவர் தற்போது கின்னஸ் சாதனை பதிவுகளுக்காக, அந்த மோட்டார் சைக்கிளை செலுத்தும் காட்சி அடங்கிய வீடியோவையும் நேரில் கண்டவர்களின் சாட்சியங்களையும்  கின்னஸ் உலக சாதனை புத்தக பதிப்பாளர்களுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொலின் ஏலவே வேகமாக இயங்கக் கூடிய, அங்கவீனவர்கள் நடமாடுவதற்கான மோட்டார் இயந்திரத்தை (மொபிலிட்டி ஸ்கூட்டர்) உருவாக்கி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மணித்தியாலத்திற்கு 71 மைல் வேகத்தில் இயங்கக்கூடியதாகும்.


You May Also Like

  Comments - 0

  • hafeez Wednesday, 03 August 2011 12:16 AM

    இதை மோட்டார் பைசெகில் என்று யார் சொன்ன?

    Reply : 0       0

    jeeva Wednesday, 03 August 2011 09:31 PM

    சூப்பர்...

    Reply : 0       0

    kirushanthy Saturday, 06 August 2011 05:17 PM

    it's good

    Reply : 0       0

    RISWAN Wednesday, 10 August 2011 06:14 PM

    அடேங்கப்பா! என்ன பைக் இது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .