2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேசு பொருள் தட்டுப்பாடு

Editorial   / 2020 ஜூலை 03 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் பிரசாரங்கள், முன்னைய தேர்தல்களைப் போல இன்னும் சூடுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸின் அச்ச மனநிலையிலிருந்து மக்கள் 

வெளிவராமை, மக்கள் பிரதிநிதிகள் பற்றிய கசப்பான பட்டறிவுகள் ஆகியவை இதில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. இனிவரும் காலங்களில் பிரசாரங்கள் சூடுபிடிக்கலாம்.  

ஆனால், எதைச் சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பது என்ற பிரச்சினை, பொதுவாக எல்லா வாக்காளர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

அதாவது, வார்த்தைப் பற்றாக்குறை அல்லது, பேசுபொருள் தட்டுப்பாடு என இதனைச் சொல்ல முடியும்.  

கடந்த சில வருடங்களாக, முஸ்லிம் அரசியல் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஆளும்

தரப்பிலும்  எதிரணியிலும் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளின் பொதுவான நிலைமை இதுவாகவே காணப்படுகின்றது.  

கடந்த 10 வருடங்களாகக் கோலோச்சிய ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள் விடயத்தில்

நடந்து கொண்ட விதத்தின் காரணமாக, அவர்களுக்கு முட்டுக் கொடுத்த முஸ்லிம் பிரதிநிதிகளின் அரசியலும் சரிவடைந்து இருக்கின்றது. அத்துடன், முஸ்லிம்

அரசியல்வாதிகள், மக்களுக்கான அரசியலைச் செய்யத் தவறியமையும் இதற்குக் காரணமாகும்.  

முஸ்லிம் மக்களின் அபிலாசைகள், நீண்டகாலத் தேவைப்பாடுகள்  போன்றவற்றை,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியிருந்தால், சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்திருந்தால், இம்முறை பிரசாரத்தில் பேசுவதற்குக் கைவசம் ஏதாவது ‘சரக்கு’க் கிடைத்திருக்கும்.  

உரிமை அரசியல் சாத்தியப்படாத தருணங்களில், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், நீண்டகாலச் செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தால் கூட, அந்த

அபிவிருத்திகளைச் சந்தைப்படுத்தி, இந்தத் தேர்தலில் வாக்குக் கேட்டிருக்க முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், தமது அரசியல் ஊடாகச் சாதித்தவைகளை, மக்களிடம் கூறி வாக்குக் கேட்க முடியும்.  

அப்படி எதுவும் கையில் இல்லாமையால், காத்திரமற்ற விடயங்களை மேடைகளில் பேச முனைவதைக் காண முடிகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர், இனவாதம் பற்றிப் பேச விளைகின்றனர்.

சிலர் பெருந்தேசியக் கட்சிகளையும் முஸ்லிம் கட்சிகளையும் விமர்சித்து, வாக்குத் தேட முனைகின்றனர்.  

வேறு சில வேட்பாளர்கள், என்ன பேசுவது என்று தெரியாமலேயே பேசுகின்றனர். இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சொந்தக் கட்சி அரசியல்வாதிகளை

நையாண்டி செய்து மேடைகளில் பேசி, மக்களைக் கவர முயற்சிப்பதையும் காண முடிகின்றது.  

இந்தப் போக்குகள், தவிர்க்கப்பட வேண்டும். மாயாஜால வார்த்தைகள், பொய்

வாக்குறுதிகள், உணர்ச்சியூட்டும் பேச்சுகள், தேவையற்ற விடயங்கள் பேசுவதைத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .