2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’MCC ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைசாத்திடும்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிலேனியம் செலேஞ் கோபரேஷன் நிறுவனத்துடனான, ​MCC ஒப்பத்தத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெற்ற உடனேயே அரசாங்கம் கைசாத்திடுமென களுத்துறை மாவட்ட தேசிய மக்கள் சகத்தியின் வேட்பாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 

களுத்துறையில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

 

தற்போது அரசாங்கம் சோபா ஒப்பந்தத்திலும் கைசாத்திடுவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும், அந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டால் அமெரிக்க இராணுவ சீறுடையுடன் இலங்கைக்குள் நுழைய முடியுமெனவும் தெரிவித்தார். 

 அதேபோல் அவர்கள் நாட்டுக்குள் கொண்டுவரும் எந்தவொரு பொருளையும் சோதனையிடும் அதிகாரம் இலங்கைக்கு கிடைக்காதெனவும் தெரிவித்தார்.

 அத்தோடு, இலங்கையின் சட்டத்துக்கு பணிய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காதென தெரிவித்த அவர், அந்த சோபா ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதற்கான இலஞ்சமாகவே எம்.சி.சி ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளது என்றும் சாடினார். 

அதே இலஞ்சத்தை நல்லாட்சி அரசாங்கமும் பெற முயற்சித்ததென தெரிவித்த அவர், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அந்த ஒப்பத்தில் அரசாங்கம் கைசாத்திடும் என்றார்.

இத்தகைய பாரதூரமான ஒப்பந்தத்தில் அரசாங்கம் எதற்காக கைசாத்திட வேண்டுமென வினவிய அவர், முடியுமெனில் கொள்ளுப்பிட்டியிலுள்ள MCC அலுவலகத்துக்கு பூட்டிடுமாறும் அவர் கோரினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .