2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘அதற்கு இன்னும் ஒருவாரம் இருக்கிறது’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்கும் போது, நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் மட்டுமன்றி, அமைச்சவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படும் நபருக்கு, சர்வதேச ரீதியிலிருக்கும் அங்கிகாரம் குறித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எந்தவோர் அமைச்சைப் பற்றியும், அந்த விடயதானம் தொடர்பில், அதற்குப் பொறுப்பானவர்கள் தொடர்பிலும் நாட்டுக்குள்ளும், சர்வதேச ரீதியிலும் அங்கிகாரம் இருக்கவேண்டுமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதன்போது குறிப்பிட்டார்.  

இலண்டனில் நடை​பெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குவைத்து, பீ.பீ.சி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அந்த நேர்காணலை, பகுதி, பகுதியாக பதிவேற்றம் செய்யவுள்ளதாக பீ.பீ.சி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் திகதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதன் முதலாவது பகுதியிலேயே, ஜனாதிபதி ​மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

விசேடமாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் போன்ற அமைச்சுக்கு யாரை நியமிக்கவேண்டும் என்பது தொடர்பில், நாட்டுக்குள் பல்வேறான கருத்தாடல்கள் இடம்பெற்றமை தொடர்பில், பீ.பீ.சி குறிப்பிட்டபோது, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ”அந்த நியமனத்தின் போதும், சர்வதேச நிலைமைகள் தொடர்பில் தான் கருத்தில் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டது” என்றார்.  

அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட 15 பேரும் மற்றும் பிரதி சபாநாயகரும் தங்களுடைய பதவிகளை இராஜினாமாச் செய்ததையடுத்து, அமைச்சரவையில் புதிய மாற்றத்தை கொண்டுவரபோவதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது தொடர்பிலான கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  

“எனக்கு முன்பாக வரும் கோரிக்கை தொடர்பில் தேடிப்பார்ப்பேன். எந்தவொருவரும் அமைச்சரவைக்கு நியமிப்பதற்குத் தகுதியானவர் அல்லது தகுதியில்லாதவர் என்பது தொடர்பிலான தீர்மானத்தை எடுப்பது என்னுடைய பொறுப்பாகும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .