2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமோனியா வாயு அசம்பாவிதம்; ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

Editorial   / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐவர் உயிரிழந்ததோடு, பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த, ஹொரணை இறப்பர் தொழிற்சாலையின் சிரேஷ்ட ஆய்வுக்கூட கட்டுப்பாட்டாளர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை பொலிஸாரால் நேற்றைய தினம், திக்கெனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட 42 வயது சந்தேகநபரை, விளக்கமறியலில் வைக்குமாறு, ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தர பிறப்பித்துள்ளது.

இதேவேளை, ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக, குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடந்த 20ஆம் திகதி அறிவிக்கப்பட்டது.

குறித்த தொழிற்சாலையிலுள்ள அமோனியா தாங்கிக்குள் விழுந்து ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .