2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள்: பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

Editorial   / 2018 மே 27 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை, பட்டதாரி ஆசிரியர்களைக்கொண்டு நிவர்த்திச் செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்க​ளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், சிங்கள மற்றும் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பு தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடல், அபிவிருத்தி உதவியாளர், நிதி முகாமையாளர் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற்று கல்வி அமைச்சிலும், திணைக்களங்களிலும், தேசிய பாடசாலைகளிலும், கல்வியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

11 வருடங்களாக தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.

மேலும் இது குறித்த மேலதிக தகவல்கள் நேற்றுமுன்தினம் (25) வெளியான அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .