2024 மே 09, வியாழக்கிழமை

இடியுடன் கூடிய மழை தொடரும்

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய வானிலை எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  

இன்று பிற்பகல் 1.30 மணிமுதல் அடுத்து வரும் 12 மணித்தியாலங்களுக்கு அந்த நிலையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல், ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியுமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது இந்த பகுதிகளில் தற்காலிகமாக கடும்காற்று வீசக்கூடுமெனவும், இடி, மின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  கேட்டுக்கொண்டுள்ளது.      

மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தொடக்கம் கொழும்பு மற்றும் கொழும்பு தொடக்கம் பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில் காற்று வீசக்கூடுமெனவும், இந்த சந்தர்ப்பத்தில் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X