2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

Editorial   / 2020 செப்டெம்பர் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையே விஷேட சந்திப்பொன்று இடம்பெற உள்ளதென பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பு இன்று (26) மாலை வீடியோ மூலம் நடைபெற உள்ளதெனவும், இந்த சந்திப்பில் இந்திய  மீன்பிடித்தொழிலாளர்கள் சட்டவிரோத மீன்பிடிச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று (25) அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது,  இந்திய மீன்பிடித் தொழிலாளர்கள்  இந்நாட்டின் கடற்பரப்புக்குள் நுழைவதாலும், மீனினங்களை கொன்றொழிப்பதாலும், வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலாளர்கள் அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளமை தொடர்பாக அறிவுருத்தப்பட உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .