2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இந்தியாவை பகைத்துக்கொள்ள முடியாது’

Gavitha   / 2021 ஜனவரி 19 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விடயத்தில், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள முடியாது என, துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல்-வாங்கல், சர்வதேச தொடர்புகள் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மீள் ஏற்றுமதி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியாவுடன் 66% மீள் ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல் செய்து வருவதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

“இந்தியா அண்டைய நாடு. இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. ஒரே கிராமத்தில் உள்ள மைக்கல் அண்ணரும் சிறிபால அண்ணனும் அடித்துக் கொள்ளும்போது அவர்களை கிராமத்தில் இருந்து விரட்டுவது போல நடந்து கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .