2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை மருத்துவ சபைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களைப் பெற்றுக்கொள்வோர், மருத்துவ சபையின் 16 ஆவது உறுப்புரையின் கீழ் பதிவு செய்வதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உயர்நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு இன்று (23)  உத்தரவிட்டுள்ளது. 

பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய குழாம்,  இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப்  பட்டம் பெற்ற 16  பேர் இணைந்து தாக்கல் செய்த,  அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் போதே,  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அக்கீகரிக்கப்பட்ட   வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டங்களை பெற்றிருந்த போதிலும், தொழில் நிமித்தம் விண்ணப்பிக்கும் போது, இலங்கை மருத்துவ சபை  நிராகரிப்பதாக, மனுதாரர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக, தங்ளது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்கள் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டீ சில்வா, சட்டத்தரணி சுகத் கல்தேரா, நிரான் எக்னிடெல் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .