2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பில் கேட்ஸ் பாராட்டு

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் முன்னேற்றகரமான ஆரம்ப சுகாதார சேவையை கட்டியெழுப்பியுள்ளதாக, உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், 'பில் அன் மெலின்டா கேட்ஸ்' நிதியத்தின் இணை ஸ்தாபகருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆரம்ப சுகாதார  சேவை பணியாளர்களாக பெண்கள் பணியாற்றுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரின் கல்வி முறைமையை பாராட்டியுள்ள பில் கேட்ஸ், உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும், அந்த நாட்டைப்போன்று சிறப்பான கல்வி முறைமை இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .