2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கையில் விரைவாக பரவி வரும் காசநோய்

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக காச நோய் தினம் நாளை (24) ஆகும். இதற்கமைய 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் 8,511 பேர் காச நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 8,113 பேர் புதிதாக இனங்காணப்பட்ட காச நோயாளர்கள் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நோயினை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெற்றுக்கொள்ளாவிடின், நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றுறொரு நபருக்கு இந்நோய் பரவக் கூடும் என, வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக சிறுவர்கள் இந் நோய் தொற்றுக்கு உள்ளாகாத வகையில் பாதுகாத்துக் கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .