2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின் அரசியல் தீர்வு’

Editorial   / 2018 ஜனவரி 16 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேசியப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வொன்றைக் காணுவதற்கான முயற்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   

பிரதமர் அலுவலகமும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய பொங்கல் தைப்பொங்கல் விழா, அலரி மாளிகையில் நேற்று (15) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகமும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய பொங்கல் தைப்பொங்கல் விழா, அலரி மாளிகையில் நேற்று (15) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,  

“அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு, புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதிலுள்ள பெரும்பான்மையானவைக்கு, கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. தேசிய பிரச்சினைக்கான தீர்வுவொன்றைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு, அரசியல் கட்சிகளிடமே தற்போது உள்ளது. உள்ளூ​ராட்சித் தேர்தலுக்குப் பின்னர், அரசியல் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கும் நாட்டிலுள்ள அனைத்து இன‍ங்களுக்கிடையிலும் நல்லுறவைக் கொண்டுவருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.  

“ஒரு நாட்டின் கலாசாரம் மற்றும் விழாக்க​ளைப் பாராட்டுவதன் மூலம், நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையையும் சமரசத்தையும் கொண்டுவருவதற்கு உகந்த சூழ்நிலை காணப்படுகின்றது.  

“அறுவடைக்காக, இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே, இந்துக்களால் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. அறுவடைக்கு, கடவுளின் ஆசிர்வாதம் வேண்டும் என்பதற்காகவே, சிங்கள மக்களால் ‘வப் மகுல்’ கொண்டாடப்படுகின்றது. எனவே, இரண்டு இனத்தவர்களுக்கும், ஒருவருக்கொருவர் பூரணப்படுத்துகின்றனர்” என்று அவர் கூறினார்.  

மாறி வரும் உலகத்தில், தைப்பொங்கல் பண்டியை சர்வதேச விழாவாக மாறியுள்ளது எனத் தெரிவித்த பிரதமர், அது, இலங்கையின் தேசிய விழாவாகவும் மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .