2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஊடகவியலாளரை அச்சுறுத்தி இழுத்துச் சென்ற நியோமல்

Editorial   / 2020 ஜூலை 10 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவ, கொழும்பு மேல் நீதிமன்ற  வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதுடன், அவரை இழுத்துச் சென்று நீதிமன்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தன்னை ஊடகவியலாளர் என்று அடையாளப்படுத்திய போதும் அவர் இவ்வாறு முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸ்சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி கார்டுகளை எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள முன்னாள் பொறுப்பதிகாரி நியோமல் ரங்கஜீவவை,  உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து குறித்த ஊடகவியலாளர் புகைப்படம் எடுக்க முயற்சித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .