2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எமில் காந்தன், டிரான் அலஸுக்கு விடுதலை

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நாட்டின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் வீடுகள் அற்றவர்களுக்கான வீடமைப்பு பணிகளுக்காக ராடா நிறுவனத்துக்கு இலங்கை மத்திய வங்கியாள் விடுவிக்கப்பட்ட  1.7 பில்லியன் ரூபாய் பணத்தில் அப்பிரதேசங்களில் ஒரு வீட்டைக்கூட கட்டிக்கொடுக்கமால் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கின்  அடிப்படை ஆவணங்களின் மூலப்பிரதிகளை ஒருபோதும் தான் கண்டதில்லை என்றும், அவை இரண்டாம் நிலைப் பிரதிகளாக மாத்திரமே உள்ளனவெனவும்,  ராட நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சந்திரகாந்தி பெர்ணான்டோ  சாட்சியமளித்திருந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகளை இதற்கு அப்பால் தொடர வேண்டிய அவசியம் இல்லையென பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்  திலீப பீரிஸ் மன்றிலி தெரிவித்தார்.

அதன்படி, ராடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ், புலிகள் அமைப்பின் நிதிச் செயற்பாடுகளின் பிரதானியென கூறப்படும் எமில் காந்தன்,  இந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி சாலிய விக்கிரமசூரிய, கணக்காய்வாளரான ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகிய நால்வருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ​மேற்படி வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில்,  சுனாமி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லாட்சிக்கு முன்பாக இருந்த அரசாங்கத்தால்  1600 வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான மேற்படி நிதி ஒதுக்கப்பட்டிருந்தாகவும், அந்த பணத்தில்  167 மில்லியன் ரூபாய்களை ராடா நிறுவனம் மோசடி செய்திருந்ததெனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .