2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணிக்கு அமைச்சர் மனோவின் கோரிக்கை

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை,  குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாகத் தெரிவித்து, நாட்டுக்குள் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாமென, ஒன்றிணைந்த எதிரணியிடம் கோரிக்கை விடுப்பதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில், நேற்று (18) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,

நாட்டின் தலைவர், பிரதமர் உள்ளிட்ட எந்தவொரு நபரையும் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லக் கூடிய வகையில், நாட்டின் சட்டம் சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஜனாதிபதி தொடக்கம், சாதாரண பொதுமகன் வரை அனைவரும் சமனானவர்களென, நல்லாட்சியின் அரசாங்கத்தின் அரசமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாக தெரிவித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் நாடுபூராகவும் பெரிய குழப்ப நிலையை ஏறந்படுத்துகின்றனர். அது குழுவா, ஒன்றிணைந்த எதிரணியா, சுயாதீனமாவென சொல்லத் தெரியவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஸ என்பவர் தான் மதிக்கும் முன்னாள் தலைவரெனத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .