2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் குறித்த தகவல்களை பகிரவும்’

Editorial   / 2018 ஜூன் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கு அமைய, 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை ஆயுதப் படையினரின் காவலில் இருந்த போது காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பான தகவல்களை அறிந்தவர்கள், அவற்றை தந்துதவுமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 இதுத் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த அலுவலகம், சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்த பெயர்களடங்கிய பட்டியல் ஒன்று தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக
குறிப்பிட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் "காணாமல் போனோருக்கான அலுவலகமானது காணாமல் போன நபர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல் மற்றும் குறித்த நபர்கள் எந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனை தெளிவுபடுத்துதல் மற்றும் அவர்களது தலைவிதி, காணாமல் போன நபர்களின் சம்பவங்களை குறைப்பதன் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகார சபைகளுக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "காணாமல் போன நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் நலன்களை பாதுகாத்தல், மற்றும் காணாமல் போன நபர்கள் அல்லது அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படக்கூடிய முறையான நிவாரணங்களை அடையாளங்காணுதல் போன்ற செயற்பாடுகளுக்கான அதிகாரமுடைய இலங்கையிலுள்ள நிரந்தரமானதும் சுதந்திரமானதுமான அமைப்பு ஆகும்." எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆகவே சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான ஏதேனும் மேலதிக அல்லது விரிவான தகவல்களை இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள எவரேனும் அறிந்திருந்தால் காணாமல் போனோருக்கான அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு அந்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .