2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிளைபோசெட் தடை நீக்கம்

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளைபோசெட்  எனப்படும் இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் விவசாய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிளைபோசெட்  இரசாயன உரத்தினால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே, குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிரந்த தடையை நீக்குவது தொடர்பில் இரு தினங்களுக்கு முன்னர் சர்ச்சை நிலவியது.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் சுஜீவ அத்துரலிய ஆகியோருக்கடையில் இவ்வாறு சர்ச்சை நிலவியது.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க கிளைபோசெட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க, அதற்கு அத்துரலிய ரதன தேரர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேவேளை நேற்று (19) விவசாய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, கிளைபோசெட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாகவே குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .