2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கிழக்கில் ஒரு பேச்சு; வடக்கில் வேறொரு பேச்சு’

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்  

“கிழக்கில் ஒரு பேச்சும் வடக்கில் வேறொரு பேச்சும் பேசுபவர்கள், சமூகத்தின் உரிமைகளை எப்படி பாதுகாக்கபோகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்” என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.   

மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,  

“வட்டார முறையில் நடைபெற இருக்கும் இத்தேர்தல் முறை கொண்டுவரப்பட்ட நோக்கம் தெரியாமல் சிறுபான்மைக் கட்சிகள், இனவாத ரீதியிலான பிரசாரங்களை முன்னெடுக்கின்றன.   

“கிராமங்களில் வாழும் சாதாரண பொதுமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே, இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. பழைய தேர்தல் முறை மூலம், பிரதேச நகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் உறுப்பினர்களைப் பெற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டது.   

“அவற்றை நிவர்த்திச் செய்து, ஒவ்வொரு வட்டாரம் சார்பாகவும் ஒரு பிரதிநிதியை உள்ளூராட்சி சபைக்களுக்கு அனுப்பி, அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  

“ஆனால், இத்தேர்தல் மூலம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருகிறோம், உரிமைகளைப் பாதுகாப்போம் எனக் கூறி, கிழக்கில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள், இனவாத ரீதியான பிரசாரத்தை முன்னெடுப்பதைப் பார்க்கும் பொது மிகவும் வேடிக்கையாக உள்ளது.   

“உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்தேர்தலால், எவ்வாறு உரிமைகளைப் பெற்றுத்தர முடியுமெனப் புரியவிலல்லை.   

“ஆகவே, அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கொண்டுவரபட்ட இத்தேர்தல் முறையின் சகல அனுகூலங்களையும் மக்கள் அனுபவிக்க வேண்டும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .