2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொரோனா தொற்றை ஒழிக்க அரச புலனாய்வு பிரிவு நேரடி ஒத்துழைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றை தடுக்கும் செயற்பாடுகளில்  அரச புலனாய்வு பிரிவினர் நேரடி ஒத்துழைப்பை வழங்கி வருவதாக, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேரடி ஆலோசனைக்கமைய, இலங்கையில் முதலாவது கோவிட்-19 நோயாளர் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து அரச புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசேட செயற்பாடுகளால் நாட்டில் கொரோனா பரவுவதை குறைக்கக் கூடியதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்தேகொட, மாரவில, நுகேகொடை, பொரல்ல, தெஹிவளை, குளியாப்பிட்டிய, புத்தளம், பண்டாரகம, இரத்மலானை, அக்குறணை, நாத்தாண்டியா, பம்பலப்பிட்டி,வென்னப்புவ, ஜாஎல, அட்டுலுகம, வெல்லம்பிட்டி, யாழ்ப்பாணம், மருதானை ஆகிய பிரதேசங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நோயாளர் இந்தோனேசியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்தவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தாரென்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .