2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோட்டாபய உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளின் போது, நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை  எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி, நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனாத சில்வா அறிவித்தல் விடுத்துள்ளார்.

டீ.ஏ.ராபக்ஷ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படாத நிலையில், 81.3 மில்லியன் ரூபாய் செலவிட்டு இதன் நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு அதில் நிதி மோசடி செய்திருப்பதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .