2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’கோட்டாவிடம் விசாரணை நடத்த தைரியம் இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களில், உத்தரவுகளைப் பிறப்பித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கான தைரியம் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இல்லையென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தரவுகள் இன்றி எதுவும் நடைபெறப்போவது இல்லையென அவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் " பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்துடனும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தொடர்புகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

"பாதாள உலகக் குழுக்களுடன் எவருக்காவது தொடர்புகள் காணப்பட்டால் அவர் படுகொலை செய்யப்படுவார் எனினும் பொலிஸ் விசாரணைகள் எதுவுத் முன்னெடுக்கப்படமாட்டாது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களை படுகொலை செய்வதற்கான உரிமை அரசியல்வாதிகளுக்கு இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .