2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சதி செய்து எம்மக்களை கொன்றதை நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது?’

Editorial   / 2018 மே 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி ஓரிடத்துக்கு எம்மக்களை கொண்டுவந்து, சதி செய்து எம் மக்களை கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது என்று கேள்வியெழுப்பிய, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதென்பதெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அலகுகள்.

ஆகவே, நினைவேந்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் இப்போது உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.  

வாரத்துக்கொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“மரணித்தவர்களின் நினைவை நாம் வருடந்தோறும் ஏந்தல் எமது பாரம்பரிய வழக்கம். அநியாயமாக கொல்லப்பட்ட எமது உறவுகளின் நினைவேந்தலை நடத்துவது வழக்கமான நினைவேந்தல்களை விட முக்கியமாகத் தேவையானதொன்று. எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 

“புலிகளைத் தொடர்ந்து இக்கட்டான நிலையை ஏற்படுத்த விழைகின்றோம் என்ற உங்கள் அடுத்த கூற்று நகைப்புக்குரியது. வடக்கு, கிழக்கில் எமக்கான உரித்துகளை நாம்
முன்வைத்தால் உடனே பதட்டப்படுவது கொழும்பில் உள்ள தமிழர்கள் தான். தமக்கிருக்கும் சொத்து, சுகம், வசதிகள், பதவிகள் யாவற்றையும் இழந்து விடுவோமோ என்ற பயந்தான் உங்களை அவ்வாறு சிந்திக்க வைக்கின்றது” என்றும் அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .