2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சம்பந்தன், திகாம்பரத்துடன் இணைந்து பயணிக்கிறோம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

 

பெருந்தோட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களூடாக, நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் பழனி திகாம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடன் இணைத்து, இதற்கான பயணத்தை முன்னெடுத்து உள்ளதாகவும் கூறினார்.  

பண்டாரவளை - பூணாகலை, அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாக்கப்பட்ட 157 வீடுகளை, பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (13) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், பெருந்தோட்ட மக்களுக்கு, 7 பேர்ச் காணியை வழங்க வேண்டுமென, கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது, தானும் அமைச்சரவைப் பத்திரங்களைச் சமர்ப்பித்த போதிலும், அது நிறைவேறாத நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்றமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  

இன்று, லயன் குடியிருப்புகளில் வாழும் 172,700 குடும்பங்களுக்கும், தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவரது முயற்சிக்கு தாமும் கைக்கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், சுகாதார அமைச்சர் என்ற வகையில், தோட்டப் பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகளை அரசுடைமையாக்கி, எதிர்வரும் காலத்தில், தேசிய ரீதியில் இம்மக்களுக்கான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .