2024 மே 09, வியாழக்கிழமை

சுதந்திரக் கட்சியிலும் மறுசீரமைப்பு; துமிந்தவின் பதவிக்கும் ஆபத்து

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு முன்னர் (மே 08 - 15) மறுசீரமைக்கப்படவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சில நிர்வாக ரீதியிலான மாற்றங்களும் ஏற்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த மறுசீரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியதன் பின்னர், நடைபெறவுள்ள முதலாவது மத்திய செயற்குழுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய சுதந்திரக் கட்சி உறுபபினர்களும் வெளியேறி கட்சியை புதுப்பிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குறித்த 16 உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.

இதேவேளை, சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துடனான தொடர்புகளை துண்டிக்க வேண்டுமென ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க தெரிவித்திருந்தார்

இந்நிலையில், பதவித்துறந்த சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், துமிந்த திசாநாயக்கவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் கட்சியை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிததார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X