2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜனாதிபதியாவதற்காகப் போட்டியிடவில்லை; ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்

Editorial   / 2019 ஒக்டோபர் 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் அவரும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருப்பாரென ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அக்கறைப்பற்றில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
நான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காகவே போட்டியிடுகின்றேன்.

குறிப்பாக பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளின் பிரகாரம் வெற்றிபெற்ற வாக்குகளின் வித்தியாசம் 2 தொடக்கம் 2.5 இலட்சங்களாக தான் அமைந்துள்ளது .

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லாமல்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் இருபெரும் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளன.

இது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவவதாய் இல்லை. இதனாலேயே இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .