2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திரிபுபடுத்தப்பட்ட உரையாடல் ஒலிப்பதிவு; நால்வரும் மன்றில் ஆஜர்

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:20 - 1     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, திரிபுபடுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவை வழங்கிய சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ள பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட  நால்வர், இன்று (28), நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன விடுத்திருந்த அறிவிப்புக்கமையவே, நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜராகியிருந்தனர்.

குறித்த ஒலிப்பதிவு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையைச் சமர்பிக்குமாறு, நீதவான் லங்கா ஜயரத்ன, அரச பகுப்பாய்வுத்  திணைக்களத்துக்கு, இதன்போது உத்தரவிட்டார்.

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், பெர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் கையளித்த ஒலிப்பதிவு அடங்கிய இறுவட்டை, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இன்று (28) நீதிமன்றத்தில் சமர்பித்தது.

குறித்த வழக்கை விசாரித்த நீதவான், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி வரை, இந்த வழக்கை  ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 1

  • mohd Monday, 28 January 2019 01:15 PM

    december25??????????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .