2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தீபிகாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை

Editorial   / 2018 ஜூலை 19 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகமவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில், பிரதமர் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, இந்த விடயம் ​குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு  ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை  நாட்டில் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வெளியிட்ட கருத்தே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அடங்களாக ஏனைய ஆணையாளர்களுக்கு பாதுபாப்பை உறுதிப்படுத்துமாறு ஆலாசனை வழங்கப்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசியலமைப்பின் கொள்கைகளுக்கமைய அமைக்கப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, சுயாதீனமான செயற்படும் ஓர் நிறுவனமாகும்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு  பகிரங்கமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .