2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொடர்ந்து வீழ்கிறது ரூபாய்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, தொடர்ச்சியாக வீழ்ந்துவரும் நிலையில், நேற்றும் (20) வீழ்ச்சியைச் சந்தித்து, இலங்கை வரலாற்றில் மோசமான பெறுமதியை வெளிப்படுத்தியது.

நேற்றைய தினம், 0.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த ரூபாயின் பெறுமதி, ஐ.அமெரிக்க டொலர் ஒன்றுக்கு, 168.15 ரூபாய் என்ற அளவை வெளிப்படுத்தியது. புதன்கிழமை சந்தை நடவடிக்கைகளின் முடிவில், ஐ.அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, 167.20 என்ற அளவில் காணப்பட்டது.

தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் ரூபாயின் பெறுமதி, இம்மாதத்தில் மாத்திரம், ஏறத்தாழ 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, இவ்வாண்டில் 9.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்தோடு, வரலாற்றில் மோசமான பெறுமதியை, தொடர்ச்சியாக 7ஆவது அமர்வாக வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாய் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, வாகன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், இலங்கை மத்திய வங்கி ஈடுபட்டுள்ளது. இதன்படி, கார்களை இறக்குமதிசெய்ய விரும்பும் இறக்குமதியாளர்கள், குறித்த கார்களின் முழுப் பெறுமதிக்கான, வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன் சான்றைக் கையளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நடைமுறையாக, பெறுமதியின் குறிப்பிட்டதொரு பங்கையே, இவ்வாறு கடன் சான்றாகக் காட்ட வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .