2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பந்துலவுக்கும் இன்று அழைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தனவை, வாக்குமூலம் அளிப்பதற்காகச் சமுகமளிக்குமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. 

தேசிய லொத்தர் சபை, நிதியமைச்சின் கீழே இருக்கவேண்டும் என்றாலும், அந்தச் சபை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்று தெரிவித்தமை தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்கே, அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.  

நிதியமைச்சின் கீழிருக்கவேண்டிய லொத்தர் சபையானது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் அவர், மனுத்தாக்கல் செய்துள்ள நிலையிலேயே, வாக்குமூலமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.  

“வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, இன்று (15) வருமாறு, அத்திணைக்களத்தின் அதிகாரிகள் என்னை அழைத்தனர். எனினும், வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின், என்னுடைய வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டேன்” என்று பந்துல குணவர்தன எம்.பி தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .