2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பயணிகள் பஸ்கள் ஓட மண்ணெண்ணெய் பயன்பாடு

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகளுக்கான தனியார் பஸ்களை இயக்குவதற்கு, டீசலுக்குப் பதிலாக, மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படும் விடயம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புலனாய்வு அணியொன்றால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   

தமது செலவுகளைக் குறைப்பதற்காகவே, மண்ணெண்ணெயை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், மீனவர்களும் மின்சாரமில்லாத இடங்களில் இருப்பவர்களும் பயன்பெறுவதற்காகவே, சலுகை விலையில், மண்ணெண்ணெய் விற்பனையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஈடுபட்டு வருகிறது.   

எனவே அச்சலுகை விலையில் மண்ணெண்ணெய் வாங்கி, பின்னர் பஸ்களை இயக்குவதற்காக அதைப் பயன்படுத்துவதன் மூலம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படுகிறது என, அக்கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

இந்த விடயம் தொடர்பாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் கேட்டபோது, பயணிகள் போக்குவரத்து பஸ்களை இயக்குவதற்கு, இயந்திரத்துக்கான எண்ணெயுடன், மண்ணெண்ணெயைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துவருகிறது என, அவர் ஏற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக, ஏராளமான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், வாகனங்களைப் பராமரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.   
தொடர்ந்து அவர், யுத்தக் காலத்தில், வாகனங்களை இயக்குவதற்கு, இலங்கையின் வடக்குப் பகுதியிலேயே, இவ்வாறு மண்ணெண்ணெய் பயன்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .