2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் கட்டணம் உயரும்?

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து, அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கத் தவறுமாயின், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.  

கம்பஹாவில், நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித், சமீபத்தில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டமையால், பஸ் போக்குவரத்து எதிர்கொண்டுள்ள நட்டம், மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதெனக் கூறினார்.

 என​வே, புதிய பஸ்களைக் கொள்வனவு செய்யும் போது, 2 சதவீத சலுகை விகிதங்களை அரசாங்கம் வழங்கவேண்டும் என்றும் அத்தோடு, டயர்கள், டியூப்கள், உதிரிப்பாகங்கள் கொள்வனவு செய்யும் போது, அதற்கு விதிக்கப்படும் வரி, முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும், அவர் கோரினார்.  

இந்தக் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசாங்கம் மறுத்தால், ஒருதலை பட்சமாக, பஸ்களின் பிரயாணக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் அது, வருடாந்த பஸ் பிரயாணக் கட்டணச் சீர்திருத்தத்தை விட அதிகமாக இருக்கும் என்றும், அவர் மேலும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .