2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

Editorial   / 2018 மார்ச் 23 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் குடியரசு தின விழா, இன்று (23) முற்பகல், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்பற்றினார்.

 

விழாவுக்குச் சென்ற ஜனாதிபதியை, பாகிஸ்தானிய பிரதமர் சஹீட்கான் அப்பாசி, மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதி சிறிசேனவின் வருகையுடன், விழா நடவடிக்கைகள் ஆரம்பமானதுடன், இரண்டு நாடுகளதும் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அதிதிகள், இராணுவ அணிவகுப்பு மரியாதை மற்றும் விமானப் படையினரின் சாகசங்களைப் பார்வையிட்டனர்.

இந்த விமான சாகசங்களில், பாகிஸ்தான் இராணுவத்தினருடன் பஹ்ரெய்ன், ஜோர்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் இராணுவத்தினரும் ஈடுபட்டனர். மூன்று மணிநேரமாக இடம்பெற்ற இந்தக் குடியரசு தின விழாவில், பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் விழாவில் உரையாற்றினார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவைக் எடுத்துக்காட்டும் வகையில், தனது உத்தியோகபூர்வ அழைப்பையேற்று பாகிஸ்தானின் குடியரசு தின விழாவில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு, நன்றியைத் தெரிவித்தார்.

விழா நடைபெற்ற பிரதேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட இந்த வரவேற்பை இலங்கை பாகிஸ்தான் இருதரப்பு உறவுகளில் முக்கிய திருப்புமுனையாகக் குறிப்பிட முடியும்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இஸ்லாமாபாத் சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை, இன்று பிற்பகல் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளதுடன், ஜனாதிபதிக்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல், அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .