2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதமருக்கு ரோஹித்த சவால்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முடிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான யோசனை ஒன்றை முன் வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சவால் விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அதில் வெற்றியும் ​பெறப்பட்டுள்ளது. மக்களை மதிக்கும் பிரதமர் எனில் நாளையே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையொன்றை முன்வைக்கவும். ஏனெனில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான  காலம் இப்போது சரியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடாளுமன்ற கலைப்புத் தொடர்பான யோசனைக்கு நாம் கையுயர்த்த தயாராகவிருக்கின்றோம். மக்களின் அபிலாஷைகளை அழிக்க 117 பேருக்கு இடமளிக்கப்படாது. எனவே நாளையே இந்த யோசனையை முன்வைக்குமாறு நாம் சவால் விடுக்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .